On the Vinayagar Chaturthi day, the streets are filling with festive music.
Kozhukattai is melting on every tongue. And above all, our Pillaiyar – the lord of fresh beginnings – is arriving.
In life and in work, this day belongs to Vighnaharta, the one who turns obstacles into dust.
If you think about it, Ganesha is the world’s best project manager. He takes the tangled problem, sits with it quietly, and finishes it without drama.
That is the kind of work we try to do every day at Sharman’s Cab Company — on time, without wasted loops, and without leaving a mess for someone else to clean up.
On this auspicious day I share three wishes with our employees, driver partners, suppliers and clients.
Wisdom : When the challenge was to circle the world, Pillaiyar simply circled his parents and won. May we receive that same cleverness — so we solve the day’s problems the short way.
Prosperity : May your hard work return as sweet as kozhukattai.
May your work and your home grow steadily, with the same quiet strength we see in Him.
Peace : No matter how heavy the workload, one trunk of faith is enough to face the road. May that calm stay in your family.
To everyone who stands behind this company — thank you.
Every honest trip, every patient hour, every clean bill is how we move forward.
This Vinayagar Chaturthi, let us crack the obstacles in front of us the way we crack coconuts — cleanly, together — and go a little higher.
Warm wishes to you and your family.
Agni Sharman
Sharman’s Cab Company
(AgniSharman Logistics Pvt Ltd)
தடைகளைத் தகர்த்து, வெற்றிகளை அள்ளுவோம்!
இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்!
தெருவெங்கும் மங்கள இசை, நாவில் கரையும் கொழுக்கட்டை, எல்லாவற்றிற்கும் மேலாகப் புதுத் தொடக்கங்களின் நாயகனான நம் பிள்ளையாரின் வருகை – ஊரே கோலாகலமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது.
நமது வாழ்க்கையிலும் சரி, தொழிலிலும் சரி, வரும் தடைகளைத் தவிடுபொடியாக்கும் விக்னஹர்தாவின் பிறந்தநாளே இந்த விநாயகர் சதுர்த்தி.
சொல்லப்போனால், எந்தச் சிக்கலையும் அமைதியாகவும் அசால்ட்டாகவும் தீர்த்து வைக்கும் உலகின் சிறந்த “புராஜெக்ட் மேனேஜர்” நம் விநாயகர் தான்.
இந்த இனிய நன்னாளில் உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த மூன்று வாழ்த்துகள்:
அறிவுக்கூர்மை : உலகையே வலம் வர வேண்டும் என்ற சவாலை, பெற்றோரை மட்டுமே சுற்றி வந்து எளிதாக வென்றவர் நம் பிள்ளையார். அதே சாதுரியமும் புத்திசாலித்தனமும் நமக்கும் கிடைத்து, அலுவலகச் சவால்களை வீண் சுற்றுகள் இல்லாமல் வெல்ல வாழ்த்துகிறேன்.
செல்வ வளம்- உங்கள் கடின உழைப்புக்குக் கொழுக்கட்டை போன்ற இனிப்பான பலன்கள் கிடைக்கட்டும். பிள்ளையாரின் கம்பீரத்தைப் போல உங்கள் தொழிலும் வாழ்க்கையும் பிரம்மாண்டமாக வளர வாழ்த்துகிறேன்.
மன அமைதி- எவ்வளவு வேலைப் பளு இருந்தாலும், ஒரு தும்பிக்கை நம்பிக்கை இருந்தால் எதையும் எதிர்கொள்ளலாம். அந்த அமைதியும் பேரானந்தமும் உங்கள் குடும்பத்தில் என்றும் நிலைத்திருக்கட்டும்.
நம் நிறுவனத்தின் வெற்றிக்குப் பக்கபலமாக இருக்கும் உங்கள் ஒவ்வொருவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.
இந்த விநாயகர் சதுர்த்தி நாளில், சிதறுகாய் உடைப்பது போல முன்னே இருக்கும் தடைகளையும் உடைத்து, புதிய உயரங்களைத் தொடுவோம்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.
அன்புடன்,
Agni Sharman